கொள்ளுமேடு
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...* உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . *

புதியது

Post Top Ad

LightBlog

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

வியாழன், 19 ஜனவரி, 2023

உலகம் இப்படித்தான் அழியும்!

12:12 AM 0பொருளடக்கம்

1.       யாரைத்தான் நம்புவது? இங்கு சொல்லப்படும் உண்மைகளின் நம்பகத்தன்மை 
2.       திருக்குர்ஆன் அறிமுகமும் வந்த வரலாறும்.
3.       திருக்குர்ஆனின் பாதுகாப்பு.
4.       சந்தேகங்கள் அறவே இல்லாத வேதம்.
5.       திருக்குர்ஆனை உறுதிப்படுத்தும் அறிவியல் உண்மைகள்.
6.       நபிகள் நாயகம்(ஸல்) யார்? அவரது முக்கியத்துவம்
7.       உலக அழிவு பற்றிய கவலை
8.       அழிவுக்கு முன் அறியவேண்டியவை.        
Read More

செவ்வாய், 17 ஜனவரி, 2023

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர் -12 ஆக்கம் M.I அன்வர்தீன்

9:40 PM 0


தொடர் -12
கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 
தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தங்களின் எல்லைகள் பிரித்து செயல்பட தொடங்கின.கொள்ளுமேடு ஊராட்சி மன்றம் எல்லையை பிரித்து தன் செயல்பாட்டை தனித்துவமாக மிகச் சிறப்பாக செயல்பட அன்றைய பெரியவர்கள் பலர் காரணமாக இருந்தார்கள். நம் ஊரைப் பொருத்த வரை கிராம பஞ்சாயத்தும் பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்தே செயல்படும்!
1996 ஆம் ஆண்டு வரை நம் ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் மக்களால் ஏகோபித்த முடிவில் விடப்பட்டு தலைவர் மற்றும் துனை தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்பது வழக்கமாக இருந்தது! தமிழகம் முழுக்க ஊராட்சி மன்ற தேர்தல்கள் களைக்கட்டும் இங்கோ ஒற்றுமை என்னும் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட்ட மக்கள் ஒரு மணி நேரத்தில் அன்னப்போஸ்டாக அதிகாரத்தை அள்ளித்தருவார்கள்!அல்லாஹ் இந்த அழகிய கிராமத்தை
கண்ணியமாக வைத்து இருந்தான்.பதவிகள் ஒருதலை பட்சமாக கொடுக்கப்பட்டபோது பிரச்சினைகளும் எழத் தொடங்கின.
நூற்றுக் கணக்கான புளியமரங்கள், மாமரம் தெண்ணை மற்றும் பனை மரங்கள் வீட்டு வரி, குளம் குட்டை மீன் ஏலம் இவையே ஊராட்சி மன்றத்தின் வருமானமாக இருந்தது.
1960 ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் காமராஜ் அவர்களும் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் தமிழக சட்ட மன்ற எதிர்கட்சி தலைவருமாகிய காயிதேமில்லத் அவர்களும் கொள்ளுமேட்டிற்கு வருகை தந்து பிரமான்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிகழ்வை இன்றும் நம் பெரியவர்கள் நினைவுகூறுவர்.அதன் பலனாக நமதூர் முன்னேற்றமும் பிரபலமும் அடைந்ததை மறுக்க முடியாது.
அன்று முதல் இன்று வரை நம் ஊர் அரசியல் மற்றும் ஆன்மீகம் என இரண்டிலும் இனைந்தே பயணிக்கும் ஊராகவே இருந்து வருகிறது.கொள்ளுமேட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்கள் மர்ஹும் நாட்டார் அப்துல் அலி அவர்களின் தந்தை,மர்ஹும் மேனேஜர் அப்துர் ரஹ்மான் மற்றும் மர்ஹும் குலாம் காதர் ஆவர்.இவர்கள் அனைவரும் சிறந்த சிந்தனைவாதிகளாகவும் பொது நலனில் அக்கரை கொண்டவர்களாகவும் இருந்தனர்.
அன்றைய கொள்ளுமேடானது பள்ளிவாசல் தெரு சின்னதெரு தோப்புத் தெரு என மூன்று தெருக்கலுடன் ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளுமே நிறைந்து காணப்பட்டது.ஊரின் முதல் மெத்தை வீடு ஆக்கூரார் மர்ஹும் பாவாஜி அவர்கள் வீடு மட்டுமே!அப்பெரியவரை எல்லோரும் மெத்தத்தா என்றே அன்பாக அழைப்பார்கள்!
பள்ளிக் கூடத்தின் பின்புறத்தில் வளையக்காரர் சுல்தான்மைதீன் யூசுப் சகோதரர்கள் செக்கு வைத்து கடலை எண்ணை நல்லெண்ணை உற்பத்தி செய்து மளிகை கடை வியாபாரம் நடத்தி இருக்கிறார்கள்.விருத்தாசலம் சந்தையில் இருந்து மனிலாபயறு எள் இவைகளை கொள்முதல் செய்து மாட்டுவண்டியில் ஏற்றிவந்து செக்கில் அரைத்து வியாபாரம் நடக்கும்.சுற்றுப்புற கிராம மக்கள் எல்லாம் நம் ஊருக்குதான் வருவார்கள்.
காரியம் ஆகும்வரை 
காளைப் பிடிப்பதும்
காரியம் முடிந்தால் 
களட்டி விடுவதும்
காலத்துக்கும் தொடர்வதை
கைவிட்டால் காலத்திற்கும் 
கண்ணியமாக வாழலாம்!
தொடரும்
என்றும் 
அன்புடன் 
அன்வர்தீன் 
17 1 2019
Read More

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர் -11 ஆக்கம் M.I அன்வர்தீன்

9:34 PM 0

 தொடர் -11


கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள்!
1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை! நமதூரில் ஜவுளிக்கடை நடத்தி ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.சைக்கிள் அறிமுகம் இல்லா அக்காலத்தில் மதராஸ் பட்டனத்தில் இருந்து சைக்கிள் வாங்கிவந்து ஊரில் ஓட்டுவார்.அன்று அது அபூர்வமாக பார்க்கப்பட்டது.
2. மர்ஹும் அப்துல் ரெஜ்ஜாக் தேவ்பந்தி அவர்கள் பெங்களூர் மத்ரஸாயே தேவ்பந் மதரசாவில் மார்க்க கல்வி பயின்றார்கள்! அப்பகுதியில் உருது பேசக்கூடியவர்கள் அதிகம் வாழ்ந்த காரணத்தால், இவர்கள் உருது மற்றும் பார்சி மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார்கள். நாங்கள் மதரசாவில் ஓதிய நாட்களில் பார்சி மற்றும் உருது கவிதை பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்கள்."ஹம்தே ஹுதாயே அக்பர்" என்ற உருது பாடலும் "மன்பந்த சர்முசாரம் ஓ ரஹிமுக்கும் ரஹிமா" என்ற பார்சி பாடலும்
அன்றைய மாணவர்கள் மத்தியில் பிரபலமானவை.
3. மர்ஹும் PM. இனாயத்துல்லாஹ் மிஸ்பாஹி, நீடூர் மிஸ்பாஹூல் ஹுதா மத்ரசாவில் பட்டம் பெற்று இளமைக் காலம் முழுவதும் மலேசியாவில் இமாமாக பணிசெய்து இறுதிகாலத்தில் ஊரில் தங்கி ஓய்வு பெற்றார்கள்.
4 மர்ஹும் SM அஜிஜூல்லாஹ் மன்பஈ அவர்கள் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபி கல்லூரியில் முதல் தர மாணவராக தேர்வு பெற்றவர்கள்!பலகாலம் நமதூர் ஜாமிஆ மஸ்ஜிதில் பணி செய்தார்கள்.சில காலம் மலேசியாவில் கில்லான் பகுதியில் தமிழ் முஸ்லீம்கள் நிறைந்த பகுயில் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாமாக சிறப்பாக பணியாற்றி புகழ் பெற்றார்கள்.
4. மர்ஹும் K ஹபீபுல்லாஹ் மன்பஈ அவர்கள்
எல்லோராலும் "ஓதுரப்பிள்ளை" என்று அன்பாக அழைக்கப்பட்டார்கள்.நல்ல குரல் வளம் மிக்கவர்கள்.சிதம்பரம் நவாப் ஜாமியாஆ மஸ்ஜிதில் தலைமை இமாமாக பல காலம் பணி செய்தார்கள்.
முஹம்மது பாரூக் அவர்கள் நமதூரின் முதல் ஹாபிஜ் பட்டம் பெற்றவர் ஆவார்.தற்போது நிறைய சகோதரர்கள் ஆலிம் பெருமக்களாக இருப்பபது மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ். ஏனோ இன்றைய காலத்தில் ஆலிம் படிப்பை படிப்பதற்கு இளைஞர்கள் முன் வருவதில்லை? மதரஸாக்கள் மாணவர்கள் இன்றி இழுத்து மூடும் அளவுக்கு சென்று இருப்பதாக செய்திகள் வருவது கவலை அளிக்கிறது!பாடதிட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால் மதரசாக்கள் மருமலர்ச்சி பெரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
ஆண்களைப் போல் பெண்களுக்கான மதரசாக்கள் ஊரெங்கும் திறக்கப்பட்டு சில மதரசாக்கள் சிறப்பாக செயல்பட்டும் வருகின்றன.இன்னும் திறம்பட செயல்பட்டு சிறந்த பெண் ஆலிமாக்கள் உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்!
என்றும் அன்புடன்
அன்வர்தீன்
10 1 2019
Read More

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர் -10 ஆக்கம் M.I அன்வர்தீன்

9:30 PM 0

 தொடர் -10

1960 ஆம் ஆண்டு கொள்ளுமேட்டில் தபால் நிலையம் (Post office) கொண்டுவரப்பட்டது.ஆயங்குடி ஆசிரியர் மர்ஹும் இப்ராஹிம் மற்றும் எனது பெரிய பாவா மர்ஹும் N முஹம்மது அலி ஆகியோரின் பெரும் முயற்சியால் அது சாத்தியமானது.அன்றைய Post master ராக மர்ஹும் இப்ராஹிம் அவர்களே இருந்தார்கள்.பிறகு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்று விடைப்பெற்றார்.
பின்னர் மர்ஹும் K ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் போஸ்ட் மாஸ்டர் பணியில் தன் ஓய்வு காலம் வரை ஓய்வின்றி உழைத்தார்.அவருடன் மர்ஹும் S முஹம்மது கௌஸ் அவர்களும் இணைந்து 20 வருடங்கள் பணிசெய்து விருப்ப ஓய்வுபெற்றார்.பின்னர் K அப்துல்லாஹ் அவர்கள் Post man ஆக 25 வருட அனுபவம் பெற்று பதவி உயர்வு அடைந்து சிதம்பரம் தலைமை தபால் நிலையத்திர்க்கு மாற்றலாகி ஓய்வுப்பெற்றார். தற்போது R ஜெக்கரியா அவர்கள் நம் ஊரின் பிரதிநிதியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் வாழ்த்துக்கள்....
விவசாயமும் வளைக்குடா வேலைகளுமே நம் மூலதனம் என எண்ணியதால் என்னவோ நமதூரில் 1995 ஆம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகள்
மிக சொர்ப்பமானவர்களே! கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியே இருந்துள்ளோம்! எனது மச்சான் AV ஹபீபுர்ரஹ்மான் சின்னதெரு அப்துல்ஹக்கீம்,சைக்கிள் கடை மர்ஹும் JM யூசுப் என படித்தவர்களை எண்ணிவிடலாம்!!
AV ஹபீபுர்ரஹ்மான் அவர்கள் கொள்ளுமேடு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பின் உயர்நிலைப் பள்ளியின் HMஆகவும் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்றார்.அப்துல்ஹக்கீம் அவர்கள் Bsc Agri முடித்து ஆடுதுறை அரசு விவசாயப் பண்ணையில் மக்கள் தொடர்பு அலுவளராக பணிப்புரிந்து ஓய்வுபெற்றார்.மர்ஹும் JM யூசுப் அவர்கள் IT தொழிற்கல்வி படித்து திருச்சி பெல் நிறுவனத்தில் பணிசெய்து விருப்ப ஓய்வுபெற்று சுயதொழில் செய்தார்.
கஷாப் அப்துல் மஜிது அவர்களின் அண்ணன் மர்ஹும் ஜெக்கரியா அவர்கள் 1977 ஆம் ஆண்டில் தமிழக காவல் துறை தேர்வானையத்தில் பதிவிட்டு காவல்துறை பயிற்சிக்கு தேர்வானார்,ஆனால் கடைசிவரை பணியில் அமர்த்தப்படவில்லை அவரின் முயற்சிக்கு வாழ்த்தை தெரிவிப்போம்!!
1972 ஆம் ஆண்டில் AS அப்துல் பாஷித் அவர்கள் முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பனியாற்றி பிறகு லால்பேட்டை பேரூராட்சியில் அலுவலராக பனிபுரிந்தார்.1988 ஆம் ஆண்டில் கொள்ளுமேடு ஊராட்சி மன்ற மக்கள் நல பனியாளராக A அபுல்ஹூசைன் அவர்கள் பணிப் புரிந்தார்.1992 இல் முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் M I சிராஜுத்தீன் அவர்கள் கிளர்க்காக பணி செய்து ஓய்வு பெற்றார்.

அரசு உதவிப்பெறும் ஆரம்ப பள்ளி,உயர் நிலைப் பள்ளி,கால்நடை மருத்துவமனை,கிராம பஞ்சாயத்து அலுவலகம்,நூலகம்,பால்வாடி,தபால் நிலையம் இந்தியன் வங்கி என பல்வேறு அலுவலகங்கள் கொள்ளுமேட்டில் காலம் காலமாக இருந்தும் நம்மால் அங்கே வேலை வாய்ப்பைபப் முழுமையாக பெறமுடியவில்லை என்பது நாம் நமது கல்வி அறிவை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது!..
இன்று நமதூர் இளைஞர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் பெற்று நூற்றுக் கணக்கில் பட்டதாரிகளாக வந்தவண்ணம் இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்...இருந்தும் ஒருவர் இருவரை தவிர அரசு வேலைப் பெறுவதில் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஏனோ?
அயல்நாட்டு மோகத்தை
அப்புறப்படுத்தி
அரசு வேலை பெறுவதில்
அக்கரை செலுத்துவோம்...
என்றும்
அன்வர்தீன்
3 1 2019
Read More

Post Top Ad

Your Ad Spot