கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர்-1 ஆக்கம் M.I அன்வர்தீன் - கொள்ளுமேடு
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...* உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . *

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர்-1 ஆக்கம் M.I அன்வர்தீன்

 


1971 & 72ஆம் ஆண்டு காலத்தில் உதயமானது கொள்ளுமேட்டில் வெற்றிலை கொடிக்கால் தொழிலாளர் நலசங்கம் கலீலுல்லாஹ் தலைவராக செயல்பட்டார்.


*1973 ஆம் ஆண்டு வரை ஊரில் ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரே கொடி பச்சிளம் பிறைக் கொடி!!எந்த கொடியும் பறக்காது, பறக்கவும் கூடாது!!!
*1974 ஆம் ஆண்டு வரை இரண்டு வெற்றிலை மண்டி ஏலக்கடைகள்!!
* 1977 ஆண்டில் உருவான திடீர்குப்பம் ( காட்டுத்தெரு)டாக்டர் பாஷா அவர்களின் முயற்சியால் உதயமானது. 24 மனி நேரத்தில் 75கும் அதிகமான குடிசைகள் போட்டு மக்கள் குடி அமர்த்தப்பட்டனர், நம் மாவட்டமே ஆச்சரியத்தில் திகைத்தது !!
*1978 ஆம் ஆண்டு வரை 5 உரக்கடைகள் அது விவசாயிகளின் பொற்காலம்தான் !! 
*1979 ஆம் ஆண்டு வரை S அப்துல்காதிர் ஜவுளிக்கடை சுற்றுபட்டு ஊர்களும் கொள்ளுமேட்டை நோக்கியே வரும்!!
*1979 ஆம் ஆண்டு வரை விவசாயம் செழிக்க 5 உரக்கடைகள் !!
*1979 ஆம் ஆண்டில் டீக்கடை மட்டும் ஊர் முழுக்க 12 கடைகள் ஊரே திருவிழாப்போல் இருக்கும்!!!
*1982 ஆம் ஆண்டு வரை சிலம்பு ஆட்டம் பயிற்சி வாத்தியார் 4 பேர் இருந்தார்கள்
*1983 ஆண்டில் காயிதேமில்லத் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி தொடக்கம்!
*1983 ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் சாத்தான் தேங்காய் மண்டி!! 
*1984 ஆம் ஆண்டு வரை பஹ்வான் சாப்பாட்டுகடை!! 
*1987வரை S அப்துல் வாஹித் மாவு ஆலை (என் மாமா அவர்களுடையது)
*1987 ஆம் ஆண்டுவரை காலை 6 மணிக்கெல்லாம் கடைத்தெரு
பெரும் கூழித் தொழிலாளிகளால் நிறைந்து இருக்கும் கலியமலை விருதாங்கநல்லூர், கந்தகுமாரம், நத்தமலை,திருச்சின்னபுரம்,மானியம் ஆடூர், இராயநல்லூர் அகரம் கொத்தங்குடி,சிவக்கம் இன்னும் பல ஊர் தொழிலாளிகள் தினம் வேலைக்காக காலை ஆறு மணிக்கெல்லாம்  காத்து இருந்த காலம்!!
*1988 ஆம் ஆண்டு வரை சின்ன குஞ்சி கொள்ளன்பட்டரை!!
*1988 ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் பத்தர் நகை பட்டரை!!
*1998 ஆம் ஆண்டு வரை கிருஷ்னமூர்த்தி நெல் அரவை பிளவர் மில்!!
*1989 அமானுல்லாஹ் மாவுமில் !!
*1998 வரை 4 விறகுகடைகள் அதில் மர்ஹும் அப்துல் மஜீத் அவர்கள் கடை மட்டும் பழமை வாய்த பெயர் போன கடை!!!
*2015 வரை ஜமாஅத் சில்லரை மார்கட் போக்கடா பஜார் !!
அன்று பெரிய கடைத்தெருவாக இருக்கும்,அக்கம் பக்கத்து ஊர் மக்கள் பொருட்கள் வாங்க நம் ஊரைத்தேடிதான் வருவார்கள்.
அது ஒரு கனாக்காலம்தான்
நன்றி -M.I அன்வர்தீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot