தொடர் -2
நம் பகுதி மக்களின் வாழ்வாதாரமான வீராணம் ஏரி காவேரி நீர் பங்கீட்டு பிரச்சினையால் 1978 & 79ஆம் ஆண்டுகளில் முதல் முதலில் நீர் வரத்து இன்றி காய்ந்தது!அப்போது நம் ஊரில் வெட்டுகா பயிர் 20 ஏக்கர் பதியன் பயிர் 20 ஏக்கர் முதுகால் பயிர் 10 ஏக்கர் என விவசாயம் செழிப்போடு இருந்த காலம்.
நம்மை சுற்றி உள்ள நத்தமலை இராயநல்லூர் மானியம் ஆடூர் திருச்சின்னபுரம் லால்பேட்டை கந்தகுமாரன் என அனைத்து ஊர் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்தான்
பாதிப்புக்கு உள்ளான மக்கள் அன்று இடைப்பட்டத்தில் ஒரு கிணறு வெட்டி ஊற்று நீரை குடத்தில் மொன்டு வெற்றிலைகொடியின் வேரில் ஊற்றி பயிரை வளர்த்து வந்தார்கள்.
பிறகு மூன்று மாதம் முடிவில் மழை நீரால் ஏரி நிரம்ப மக்களும் பெரும் சிரமத்தில் இருந்து மீண்டு வந்தார்கள்!!!
பிறகு மூன்று மாதம் முடிவில் மழை நீரால் ஏரி நிரம்ப மக்களும் பெரும் சிரமத்தில் இருந்து மீண்டு வந்தார்கள்!!!
அன்று பாசனத்திற்காக நம் ஊர் ஜாமாத் சார்பில் ஏரிக்கு மேற்கே சித்தமல்லி என்னும் கிராமத்தில் உள்ள 4 போர்செட்களில்
இருந்து மணிக்கு £5 ரூபாய் என பேசிநம் ஊர் ஒற்றை மதகு வாரியில் கொண்டுவந்து மதகு சட்டரை திறந்துவைத்து தண்ணீர் கொண்டுவந்தார்கள் இரண்டு நாள் ஆனது மதகை தண்ணீர் வந்து தொட
அதற்குள் ஊரில் உள்ள ஆடு மாடுகள் தண்ணீரை குடித்ததால் 5 நாள் கடந்தும் எதிர்ப்பார்த்த பலன் இல்லை. பலன் கிடைக்காமல் போகவே அந்த முயற்சி கைவிடப்பட்டது!!
அன்று ஒரு மழைத்துளி
இறங்கிவிட்டாலே மக்கள்
ஆனந்தம் அடைவார்கள்
விவசாயத்தின் தாய்ப்பால் மழைத்தானே!
இறங்கிவிட்டாலே மக்கள்
ஆனந்தம் அடைவார்கள்
விவசாயத்தின் தாய்ப்பால் மழைத்தானே!
அது ஒரு கனா காலம்!!!
நன்றி M.I அன்வர்தீன்
26 10 2018.
26 10 2018.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக