கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர்-4 ஆக்கம் M.I அன்வர்தீன். - கொள்ளுமேடு
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...* உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . *

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர்-4 ஆக்கம் M.I அன்வர்தீன்.

 


                                   தொடர் -4

நம் முன்னோர்கள் நமக்காற்றிய நற்பணிகளில் சில! செவிவழி செய்திகள் மற்றும் என் நினைவுகளை தருகின்றேன்!

கொள்ளுமேட்டின் தலைமைச் செயலகம்!கம்பீர தோற்றத்தில் மிடுக்காய் காச்சியளிக்கும் ஜாமிஆ மஸ்ஜித் இறை இல்லம்தான்!
1936 ஆம் ஆண்டு ஊர் கூடி கட்டி எழுப்பிய இவ் இறையில்லம் நம் மக்களின் கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்குகிறது!
பள்ளியின் மேற்பரப்பில் கருங்கல் சிலாப் அடுக்கி,அதை ஒன்றோடு ஒன்றாய் ஒட்டிவைத்து மேல்தளம் மூடப்பட்டிற்கும்.உள் கூடானது ஒன்பது கூடாரங்களோடு எட்டு பிரமாண்ட தூன்களால் நிலைநிறுத்தப்பட்டிற்கும்
பளிச்சிடும் வென்மை நிறத்தால் மேல்பூச்சு பூசி நிற்கும் கூடாரத்தின் அழகை கூட்ட கண்ணாடி ஜக்குகள் உரிகளாக வண்ண மயமாக தொங்கும் அந்த காட்சியை1988ஆம் ஆண்டு வரை பார்த்து இருக்கலாம்!!
விஷேசமான இரவுகள் வந்தால் கண்ணாடி குடுவையில் மெழுகுவத்தி ஏற்றிவைத்து இருப்பார்கள் இரவுநேரங்களில் காண்பதற்கு அழகாக இருக்கும்!!
ஊரின் கம்பீரத்தை பறைச்சாற்றி வந்த வான் உயர்ந்த இரண்டு மினராக்கள் ஒன்றில் 1960 ஆம் ஆண்டு மக்கள் எல்லாம் உறக்கத்தில் இருந்த நேரத்தில் மிகப்பெரும் சத்தத்துடன் பள்ளியை இடி தாக்கியது.அத்தாக்குதலில் தெற்கு பகுதி மினரா சேதம் அடைந்தது,பின்பு 1993 ஆம் ஆண்டு சேதமடைந்த மினரா
அகற்றப்பட்டு ஒற்றை மினரா ஆனது!
பள்ளியின் முகப்பில் ஏகத்துவத்தை எடுத்துரைக்க அழகுற அமைக்கப்பட்ட பாங்குமேடை!!அதன் கீழ்ப்புறம் ரவுண்டான வடிவில் மிகப் பெரிய நகரா,
மின் இணைப்பு இல்லாத காலம்! நகராவை அடித்து ஒலி எழுப்பிய பிறகே முஅத்தின் பள்ளியின் மேற்பரப்பில் அமைக்கப்பட்ட பாங்கு மேடையில் ஏறி பாங்கு சொல்வார்.
உரத்த குரலில் அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! என்ற சங்கநாதம் முஅத்தின் குரல் வளத்தோடு முழங்கும்.1973 ஆம் ஆண்டுவரை பாங்கு மேடையில் பாங்கு சொல்லும் வழக்கம் இருந்து வந்தது.
அத்தருனத்தில் மினராக்கலில் அமர்ந்து அடைக்களம் ஆன மாடப்புறாக்கள் பள்ளியை சுற்றி வட்டமிட்டு வானில் பறக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை!
தொழுகைக்காக பள்ளியைநோக்கி வரும் பெரியவர்கள் வாலிபர்கள், சிறுவர்கள், பீசாப் செல்லபாதி, ஒழுச்செய்ய மீதி பேர் என பரப்பரப்பான பள்ளிவாசல் ஆன்மீகத்தின் அழகில் ஒளிறும்!!
ஐந்து நேர தொழுகை நேரத்தை அறிய நகரா அடிப்பது வழக்கம்,வழக்கத்திற்கு மாறாக நகரா அடிக்கப்பட்டால் அபாய ஒலியாக கருதி ஊர் மக்கள் பல முனைகளில் இருந்தும் பள்ளியை நோக்கி ஒடிவருவார்கள்.
ஆபத்தை உணர்த்தும் நகரா எந்த நேரத்திலும் யாராளும் அடிக்கப்படலாம்!! பெருநாள் போன்ற விஷேச நாட்களில் அடிக்கப்படும் நகரா குறைந்தது 30+ நிமிடங்கள் தொடரும் ஆட்கள் மாறி மாறி அடிப்பார்கள்.அந்த காலத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள்,நம் தொப்புள் கொடி உறவுகள்கூட நேரத்தை கணிப்பது நகரா சத்தத்தைவைத்துதான்!!
ஒழுச்செய்யும் ஹவ்ஜுக்காக, பள்ளியின் பின்புறத்தில் 200+ அடி தூரத்தில் கிணறு அமைக்கப்பட்டிற்கும். அக்கிணற்றில் இருக்கும் ஊற்று நீரை இரும்பு வாளியால் இறைத்து வடப்புறம் உள்ள காம்பவுன்ட் சுவற்றில் சிறுசறுக்கல் வழியாக ஹவ்ஜ் தொட்டியில் வந்தடையும்.முஅத்தின் மர்ஹும் அப்துல் ரசீது அவர்கள் மூச்சிறைக்க தண்ணீரை கொன்டுவந்து சேர்ப்பார்!! ஹவ்ஜை சுற்றி மக்கள் அமர்வதற்கு திண்ணைகள் தூன்களோடு அமைக்கப்பட்டிற்கும்.
பள்ளிக்கு வெளியே இருக்கும் பிரமான்டமான தின்னைகளில் அமர்ந்து கதைபேசவும் காற்றுவாங்கவும் பெரியவர்கள் முதல் வாலிபர்கள் வரை வருவார்கள்.அனைத்து தரப்பு மக்களும் கலைப்பாறும் இடமாகவே அது திகழ்ந்தது!
முன்பு பள்ளிக்கு செல்ல ஒரு வழித்தான் இருக்கும் 1978 காலத்தில்தான் தெற்கு பகுதியில் மற்றுமொரு வழி திறக்கப்பட்டது.
1970 கால கட்டத்தில் கட்டப்பட்ட முதல் தண்ணீர் டேங் இன்றும் சிமென்ட்டு பூச்சுடன் நிற்கிறது. அதன் அருகே 40+ அடி ஆழத்தில் கிணறு வெட்டி அவ்ஊற்று நீரை டேங்கில் நிரப்பி பள்ளிக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் இலவசமாக. வினியோகிக்கபட்டது.
தெருக்களில் பைப்பு மேடைகள் அமைத்து காலை மாலை என இருமுறை தண்ணீர் வினியோகம் நடந்தது.ஊராட்சியும் ஊர் ஜமாத்தும் ஒன்றாகவே நிர்வாகம் செய்த பொன்னான காலமது.
2005 வரை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புகள் புளியமரங்கள் பனைமரங்கள் என அனைத்தும் வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடுவார்கள்.குளத்து மீன்களை பிடித்தவுடன் கரைக்குகொண்டுவந்து கூறுவைத்து உயிருடன் ஏலம் விடுவதும், மாங்காய் தேங்காய்கள் பறித்து வெள்ளிகிழமை தொழுகைக்கு பின் ஏலம் விடுவதும் வழமையாகும்!!
ஏலம் எடுத்த பொருள் அவரவர் கணக்கில் எழுதப்பட்டு வருடக்கடைசியில் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுத்து கணக்கை குலோஸ் செய்வதும் காலம் காலமாக நடந்துவந்த. நடைமுறை!!
சிரமம் இல்லா
சீரிய நிர்வாகம்
சிறப்பாய் நடந்த காலம்!
அது ஒரு கனாக்காலம்!!
-நன்றி M.I அன்வர்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot