கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர் -6 ஆக்கம் M.I அன்வர்தீன் - கொள்ளுமேடு
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...* உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . *

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

செவ்வாய், 17 ஜனவரி, 2023

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! தொடர் -6 ஆக்கம் M.I அன்வர்தீன்

                                                        

 தொடர் -6

கொள்ளுமேட் டின் வளர்ச்சியில் சங்கங்களின் பங்களிப்பு பாராட்டுக்குறியது

அல்ஹம்துலில்லாஹ்!!
1973 ஆம் ஆண்டில் அன்றைய அரேபிய தேசங்களில் வேலை வாய்ப்புகளின் வாசல்கள் உலக மக்களுக்காக திறக்கப்பட்டாலும் நம் ஊரின் வாசல் மட்டும் அடைப்பட்டே கிடந்தது! காரணம் 1971 முதல் 1977 வரையான 7 வருட காலங்கள் நம் ஊர் இரண்டு ஐமாத்தாக பிரிந்து அடிதடி என கோர்ட்டு வாசல்வரை சென்றது.
பின்னர் 1977 ஆம் ஆண்டில் ஊர் ஒற்றுமையை நோக்கி மெல்ல பயணித்தது, 1978 ஆம் ஆண்டுகளில் இரு ஜமாஅத்களும் ஒற்றுமையுடன் செயல்படத்தொடங்கினஅல்ஹம்துலில்லாஹ்...
இக்காலகட்டத்தில் வெளி உலகை பற்றி சிந்தித்த நம் இளைஞர்கள் தங்கள் பொருளதாரத்தை வளப்படுத்திக்கொள்ள வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி "வெளிநாட்டு வாழ்வை வாழ்க்கையாக"மாற்ற சவுதி, துபாய் கத்தார், குவைத்,பஹ்ரைன் மஸ்கட், லிபியா போன்ற அயல் தேசங்களுக்கு பறக்கத் தொடங்கினர்.
1985 ஆம் ஆண்டில் அன்றைய நிலவரத்தில் நமதூர் இளைஞர்கள் 15 பேர் மட்டுமே அமீரக தலைநகர் அபுதாபியில் இருந்தனர்,இருப்பினும் நலவை நாடும் நற்பனி மன்றம் துவங்கி மாத சந்தா 10 திர்கம் சேகரித்து சமூகத்தில் ஏழ்மைநிலை மக்களுக்கு உதவ தொடங்கப்பட்டது.மக்களின் கோரிக்கைகளுக்கு ஏறப்ப உதவிகள் செய்துவந்தனர்.
சில வருடங்கள் கடந்த பின்னர் 100 க்கு மேற்பட்ட இளைஞர்கள் UAE முழுக்க வருகைதர 1988 ஆம் ஆண்டில் "நுஸ்ரத்துல்இஸ்லாம்" நற்பனி மன்றம் என பெயர்
மாற்றம் பெற்று மாத சந்தா 10 திர்கம் என்ற அடிப்படையில் சங்கம் விரிவடைந்தது.
சங்கத்தின் திருமண உதவி திட்டம் பல ஏழை குமர்கள் கரைசேர காரனமாக அமைந்தது.புயல் மழைக் காலங்களில் வீடு இழந்தவர்களுக்கு உதவுவது என நலத்திட்டங்கள் சிறப்பாக நடந்தது பிற்காலத்தில் அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டன.
1989 ஆம் ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் நம் ஊர் மக்களை வாட்டி வதைத்தது மழை பொய்த்து ஏரி குளங்கள் கினறுகள் வரண்டு குடிநீர் தேவைக்கு மக்கள் சிரமப்பட்டனர். அன்று செல்வந்தர்கள் தங்கள் நிலத்தில் போர்போட்டு தங்கள் தேவைக்குப்போக மீதியை பயிர்களுக்கு மணிக்கு10 ரூபாய் வீதம் விற்பனை செய்தனர்!! ஆனாலும் மக்களின் குடிநீர் தேவைப் பூர்த்தியாகவில்லை.
இதைக் கருத்தில் கொண்டும் சதக்கத்துல் ஜாரியா என்ற நன்மையை நாடி "நுஸ்ரத்துல் இஸ்லாம்" சங்கத்தின் முன் முயற்சியால் 1991ஆம் ஆண்டு உருவெடுத்தது மேற்கு கரையில் மிகப்பெரும் அளவில் நீர் தேக்க தொட்டி.175 அடி போர் இறக்கி அந்த நீரை மின்மோட்டார் மூலம் எடுத்து தண்ணீர் டேங்கிள் சேகரித்து வீட்டிற்கு வீடு குடிநீர் இணைப்பை தந்து மிகப்பெரும் சாதனை படைத்தது!அன்று ஊர் ஒன்று பட்டு நின்றது மக்கள் பொருளாதாரத்தை வாரி வழங்கி திட்டத்தை செயல்படுத்த ஆதரவாக நின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
குடிநீர் பஞ்சம் தீர்ந்தது இதனை தொடர்ந்து இன்று ஊரில் ஆறுக்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் ஊராட்சி மன்றத்தால் வியாபார நோக்கத்தில் உருவாக்க பட்டு குடிநீர் வியாபாரம் குதூகலமாக நடந்து வருவது நீங்கள் அறிந்ததே!!
சவுதியிலும் சங்கம் இருந்ததாக அறியமுடிகிறது UAE யில் "அஹ்வான்" என்ற பெயரில் மற்றொரு சங்கம் சிறப்பாக நல திட்டங்களை செயல்படுத்தியது.
நம் ஊரில் இரண்டு பள்ளிவாசல்கள் வருவதற்கு நுஸ்ரத்துல் இஸ்லாம் மற்றும் அஹ்வான் சங்கங்களின் பெரும்முயற்சியே காரணம்!!
துபையையில் "அல் ஹைராத்" என்ற சங்கம் சிறப்பான பல சேவை செய்துவந்தது.அதுபோல் "இர்ஷாதுல் முஸ்லிமீன்" எனற சங்கமும் நம் ஊரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நம் பொருளாதாரத்தை
நலிவுற்றவர்களுக்கு
நன்மை நாடிவழங்கி
நாயனின் பொருத்தம்பெற்று
நலமுடன் வாழ்வோம்.
-நன்றி M.I அன்வர்தீன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot